Sri Vinayaka

Agajaanana Padmaarkam 
Gajaananam Aharnisham
Aneka Dam Tam Bhaktaanam 
Eka Dantam Upasmahe
https://s-media-cache-ak0.pinimg.com/236x/96/18/69/9618693a4fe2c7b5e86b4de8e77c55c2.jpg
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுகனடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய  மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு  பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய  முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த  அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை  இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள்  பெருமாளே

Comments

Popular posts from this blog

Pages From the Past

Mohana Narasimha and Chenchu Lakshmi Thayar

Prakriti and Eternal Balance